த.அறிவுச்செல்வன்

த.அறிவுச்செல்வன்
த.அறிவுச்செல்வன்

Wednesday, April 6, 2011

புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)

புவனகிரி கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

இந்தியாவின் மிக முதன்மையான இரண்டு ஆன்மீக அடியார்கள் அவதரித்த தொகுதி இதுவாகும்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உள்ளம் உருகிய அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் அவதரித்த மருதூர் கிராமம் இங்குதான் உள்ளது.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதரித்த புவனகிரியும் இங்குதான் அமைந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக திகழ்கிறது.

இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. அவ்வப்போது மழை வெள்ளக்காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொகுதியில் மிகப்பெரிய வெள்ளாறு செல்கிறது.மழைக் காலங்களில் இந்த வெள்ளாற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக வெள்ளாறு கரைகளில் இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த பகுதியில் பெரும் பாலான விவசாயிகள் அரும்பு மலர் பயிரிட்டு வருகின்றனர்.இதனால் இங்கு வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற பா.ம.க வேட்பாளர் த. அறிவுச்செல்வன் உறுதிபூண்டுள்ளார்.

தொகுதி எல்லைக‌ள்

புவனகிரி தொகுதியில் உள்ள கிராமங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பழைய புவனகிரி தொகுதியில் இடம் பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

புவனகிரி, சேத்தியாத்தோப்பு. கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சிகள், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியத்தின் 41 ஊராட்சிகள், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம் ஒன்றியத்தின் 43 ஊராட்சிகள், மேல்புவனகிரி
ஒன்றியத்தின் 40 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புவனகிரி
சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சிகள்: 3
புவனகிரி } 18 வார்டுகள்
சேத்தியாத்தோப்பு } 15 வார்டுகள்
கங்கைகொண்டான் } 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 124

விருத்தாசலம் வட்டம் (பகுதி)

பொன்னேரி (கோ), கார்குடல் மாவைடந்தல், சாத்தமங்கலம், யு.கொளப்பாக்கம், அரசக்குழி, யு.அகரம், ஊத்தங்கல், கூணன்குறிச்சி, யு.மங்கலம், வடக்குவெள்ளுர், பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், தோட்டகம், உய்யகொண்ராவி, கீழ்பாதி, மணகதி, மேல்பாதி, மேல்பாப்பணப்பட்டு, நெய்வேலி, வேப்பங்குறிச்சி, மும்முடிச்சோழகன், கம்மாபுரம், கீரனூர், கோபாலபுரம், குமாரமங்கலம், கோ.ஆதனூர், சொட்டவனம், கார்மாங்குடி, சக்கரமங்கலம், வல்லியம் மேலப்பாளையூர், கீரனூர், மருங்கூர், தொழூர், கொடுமனூர், கீழ்ப்பாளையூர், தேவங்குடி, க.புத்தூர், சிறுவரப்பூர், சாத்தப்பாடி, யு.ஆதனூர், தர்மநல்லூர், விளக்கப்பாடி, பெருவரப்பூர், கோட்டுமூளை, காவனூர், கீரமங்கலம், பெருந்துரை, பனழங்குடி, மற்றும் ஓட்டிமேடு கிராமங்கள்.

கங்கைகொண்டான் (பேரூராட்சி).

சிதம்பரம் வட்டம் (பகுதி)

கத்தாழை, வளையமாதேவி கீழ்பாதி, துறிஞ்சிக்கொல்லை, பின்னலூர், சொக்கங்கொல்லை, சாத்தப்பாடி, வடக்குத்திட்டை, வட கிருஷ்ணாபுரம். மருதூர், வட தலைக்குளம், பிரசன்னராமாபுரம், அம்பாள்புரம், நெல்லிக்கொல்லை, எரும்பூர், வளையமாதேவி, (மேஸ்பாதி), அகர ஆலம்ப்படி, ஆதனூர்(புவனகிரி), பெரிய நெற்குணம், சின்ன நெற்குணம், வீரமுடையாநத்தம், ஆணைவாரி, மிராளுர், மஞ்சக்கொல்லை, உளுத்தூர், தென் தலைத்திட்டை, பூதராயன்பேட்டை, ஆலம்பாடி(கஸ்பா), பு.ஊடையூர், சீயப்பாடி, சாத்தமங்கலம், வத்தாயந்தெத்து, கிளாவடிநத்தம், அழிச்சிக்குடி, வண்டராயன்பட்டு, வயலூர், கீரப்பாளையம், திருப்பணிநத்தம், வட ஹாரிராஜபுரம், தாதம்பேட்டை, ஆயிப்பேட்டை, கிளியனூர், ஓரத்தூர், பரதூர், பூதங்குடி, வெள்ளியங்குடி, பாளையஞ்சேர்ந்தங்குடி, சாக்காங்குடி, புளியங்குடி (ஹரிராஜபுரம்), தென் ஹரிராஜபுரம், சி.மேலவன்னியூர், எண்ணநகரம், கண்ணங்குடி, கீழ்நத்தம், இடையன்பாலச்சேரி, மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், வாக்கூர், வடப்பாக்கம், வெய்யலூர், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், தரசூர், தேவங்குடி, கே, ஆடூர், சி.வீரசேழகன், துனிசிரமேடு, பூங்கொடி, பண்ணப்பட்டு, அய்யனூர், அக்கரமங்கலம், மனக்குடியான் இருப்பு, விளகம், சேதியூர், கூளிப்பாடி, வடக்குவிருத்தாங்கம், டி.மணலூர், தெற்கு விருத்தாங்கன், டி.மடப்புரம் மற்றும் டி.நெடுஞ்சேரி கிராமங்கள்.

சேத்தியாத்தோப்பு (பேரூராட்சி) மற்றும் புவனகிரி (பேரூராட்சி).

வாக்காளர்கள் : ஆண் 1,04,753. பெண் 1,00,511. மொத்தம் 2,05,264

வாக்குச்சாவடிகள் : மொத்தம் : 254

வரலாறு:

1952 இல் கிருஷ்ணசாமி படையாட்சி, 1957 இல் சாமிக்கண்ணு படையாட்சி, 1967 ஆ. கோவிந்தராசன் ஆகியோர் வெற்றிபெற்ற வரலாற்று சிறப்புமிக்க தொகுதி இதுவாகும்.
புவனகிரி தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் தி. அறிவுச்செல்வன். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

Sunday, April 3, 2011

பா.ம.க தேர்தல் அறிக்கை 

PMK Menifesto 2011